பூர்வீக குடிமக்களுக்கு முதல் மரியாதை செலுத்துதல் என்பது அல்லது An Acknowledgement of Country என்பது ஒருவர் தனது உரையை துவங்கும் முன்னர் மற்றும் கூட்டங்கள் போன்ற பொது மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளின் துவக்கத்தில் அறிமுகம் அல்லது வரவேற்புக்கு முன் நிகழ்த்தப்படுகிறது.
நாம் வாழும் இந்த நாட்டின் பாரம்பரிய உரிமையாளர்களை அங்கீகரிக்கும் ஒரு வழியாக இது நடைபெறுகிறது.
SBS ஆடியோ மொழி ஒலிபரப்புகள் அனைத்தும் அந்த நிகழ்ச்சி துவக்கத்தில் பூர்வீக குடிமக்களுக்கு முதல் மரியாதை செலுத்தும் முறையுடன் துவங்குகிறது.
இந்த நாட்டுடன் பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்டிரைட் தீவு மக்கள் கொண்டிருக்கும் தொடர்பை அங்கீகரிப்பதற்காகவும், கடந்த காலத்தின் மற்றும் நிகழ்காலத்தின் பெரியவர்களுக்கு எங்கள் மரியாதையைச் செலுத்தும் வகையிலும் நாம் இதைச் செய்கிறோம்.
ஆஸ்திரேலியா ஒருபோதும் இறையாண்மையை விட்டுக்கொடுக்காத ஒரு நிலம் என்பதை ஒப்புக்கொள்வதற்கு இது ஒரு வழியாகும்.
பூர்வீக குடிமக்களுக்கு முதல் மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவும் இல்லை. அதை யார் வேண்டுமானாலும் வழங்கலாம்.
நாட்டிற்கு வருபவர்களை வரவேற்க வழங்கப்படும் A Welcome to Country எனப்படும் வரவேற்பு அந்த குறிப்பிட்ட நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெற்று பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்டிரைட் தீவு மக்களால் வழங்கப்படுகிறது.
பூர்வீக குடிமக்களுக்கு முதல் மரியாதை செலுத்துதல் அல்லது An Acknowledgement of Country என்பதற்கான ஒரு மாதிரி இதோ:
நிலம், வானம், நீர் என்று அனைத்துக்கும் பாரம்பரிய உரிமையாளர்களான பூர்வீக குடிமக்களை நாங்கள் அங்கீகரிக்க விரும்புகிறோம். மேலும் கடந்த காலத்தின் மற்றும் நிகழ்காலத்தின் பெரியவர்களுக்கு எங்கள் மரியாதையைச் செலுத்த விரும்புகிறோம்.
நீங்கள் வாழும் நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்கள் யார் என்பதை உள்ளாட்சி மன்றம், மாநிலம் அல்லது பிராந்திய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம் அல்லது பூர்வீக குடிமக்கள் சார்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.