1992 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் Paul Keating ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியா தினத்தின் பொது விடுமுறையை நிறுவினார்.
ஜனவரி 26-ஐ குறிக்க சரியான வழி என்ன? உங்கள் நாட்டைப் பற்றி பெருமை கொள்ள முடியுமா, அநீதிக்கு எதிராக நிற்க முடியுமா?
Andrew Gai ஆஸ்திரேலியா தினத்தை முன்னர் விரும்பியுள்ளார்
2006 ஆம் ஆண்டு Andrew தெற்கு சூடானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்தவர்.
இப்போது, Andrew ஆஸ்திரேலியா தினத்தை கொண்டாட விரும்புவதில்லை . அவர் இந்த தேதியை மாற்ற விரும்புகிறார்.
ஆஸ்திரேலிய தின விவாதத்தின் மத்தியில் காலனித்துவத்தின் வரலாறு மற்றும் அதன் தாக்கம் பெரிதும் பேசப்படும், இது பல புலம்பெயர்ந்தவர்களுக்கு நன்கு தெரிந்த வரலாறு.
ஒவ்வொரு ஜனவரி 26 அன்று, Maggie Blanden மற்றும் அவரது குடும்பத்தினரும் Tasmania பூர்வீகக்குடி சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் Hobart-இல் உள்ள எலிசபெத் வீதியில் அணிவகுத்துச் செல்கிறார்கள்.
ஆனால் இந்த அணிவகுப்பு எப்போதும் மற்றவர்களால் வரவேற்கப்படுவதில்லை.
அனைவரும் ஒன்றிணைந்து பூர்வீகக்குடி மக்களின் பாரம்பரியத்தை புரிந்துக்கொள்வதன் மூலம் ஒரு புரிதல் தீர்மானத்திற்கு வர முடியும் என்று Andrew மற்றும் Maggie இருவரும் கூறுகின்றனர்.
ஜனவரி 26-ஐ குறிக்க சரியான வழி என்ன? என்ற கேள்விக்கு சிலர் வழங்கிய கருத்துக்களுடன் SBS Examines-இற்காக தயாரிக்கப்பட்ட விவரணம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.