ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு இடத்துக்கும் மண்ணோடு, கலாச்சாரத்தோடு, மொழியோடும் இணைந்த, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீளும் தனித்த வரலாறு உள்ளது.
இதனடிப்படையில் கட்டிடங்கள் மற்றும் கலை வடிவமைப்புகளை உருவாக்குவதில் பூர்வீகக்குடியின சமூகங்களின் வரலாறு, பாரம்பரியம், மற்றும் கலாச்சார அறிவை இணைப்பதற்கு தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தப்பின்னணியில் பூர்வீகக்குடியினர் மற்றும் ஏனைய சமூகங்களிடமிருந்து பெறப்பட்ட நுண்ணறிவு ஆஸ்திரேலியாவின் இடங்கள் மற்றும் கட்டிடங்களை உருவாக்குவதில் எவ்வாறு பங்களிக்கிறது என்பது தொடர்பில் இந்த விவரணத்தில் பார்ப்போம்.

Batı Avustralya’daki Karijini Ulusal Parkı’ndaki yabani çiçekler. Source: Getty / TED MEAD
அதனால், நம் சுற்றுப்புறத்தை வடிவமைக்கும் போது, கட்டிட வடிவமைப்பாளர்கள், அரச அமைப்புகள் மற்றும் படைப்பாற்றல் வல்லுநர்கள், பூர்வீகக்குடியினரின் அறிவு தொடர்பில் மரியாதையுடன் செயல்படுவது அவசியமாகும்.
நியூ சவுத் வேல்ஸின் Bundjalung Muruwari மற்றும் Kamilaroi மக்களின் வாரிசான பேராசிரியர் Brian Martin கலாச்சாரத்தை மரியாதைப்படுத்தும் வர்த்தக வடிவமைப்புக்கான சிறந்த நடைமுறைகளை வழங்கும் International Indigenous Design Charterஇன் இணை ஆசிரியர்களில் ஒருவராவார்.
கட்டிட வடிவமைப்பில் கலாச்சாரத்துடன் பொருந்தும் வடிவமைப்பை உருவாக்கும்போது அந்த சமூகத்திற்கு தகுந்த வடிவமைப்பை உருவாக்குவதைக் குறிக்கிறது. பொது கட்டிடமோ அல்லது மைதானமோ அல்லது ஒரு சுவரோவியமோ எதுவாக இருந்தாலும், அந்த வடிவமைப்பு அந்த இடத்தில் உள்ள பூர்வீகக்குடியின கலாச்சாரத்துடன் சேர்க்கப்படுகிறது.

A University of Melbourne built project recreating the eels’ migration path from water to land, is a metaphor for Indigenous resilience, says architect Jefa Greenaway. Credit: Peter Bennetts
பூர்வீகக்குடியின நிலத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது என்பது, ஒரு இடத்தின் வரலாற்றை முழுமையாகக் கூறும் வடிவமைப்புகளை உருவாக்குவதாகும். இது புவியியலை மட்டும் காட்டுவதல்ல, குடும்பத் தொடர்புகள் மற்றும் பூர்வீகக்குடியினரின் பண்பாட்டில் முக்கியமான இடங்களை இணைக்கும் பாதைகள் போன்ற பாரம்பரியங்களுடன் உள்ள தொடர்புகளையும் அவை பிரதிபலிக்க வேண்டும்.
மெல்பன் பல்கலைக் கழகத்தின் நகர வளாகத்தைச் சுற்றி நடக்கும்போது, நிலம் தொடர்பான பூர்வீகக்குடியின பார்வைகள், அறிவு மற்றும் பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு வடிவமைப்பைப் பார்க்கலாம்.

Where Eels Lie Down by Kamilaroi artist Reko Rennie is one of the features referencing Country in Parramatta Square.
பூர்வீகக்குடியினர் தலைமையிலான வடிவமைப்பு செயல்முறைகளின் மற்றொரு முக்கிய அம்சம் அந்த இடம் மற்றும் அதன் மக்களுடன் ஆழமான உறவைப் பேணுவது என்கிறார் பேராசிரியர் Brian Martin.
மொனாஷ் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புத் துறை மூத்த விரிவுரையாளரும் மெக்சிக்கோ பின்னணிகொண்டவருமான Desiree Hernandez Ibinarriaga ஆஸ்திரேலியா மற்றும் மெக்சிகோவில் உள்ள பூர்வீகக்குடி இளம் பெண்கள் மற்றும் பூர்வீகக்குடியினர் அல்லாத ஆசிரியர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் பூர்வீகக்குடியினரின் அறிவு மற்றும் உயிரியல் கலாச்சார பன்முகத்தன்மைக்கு மதிப்பு வழங்குவதற்கான திட்ட வடிவமைப்பு முறையை உருவாக்கியிருந்தார்.
பூர்வீகக்குடியின இளைஞர்களுடன் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒரு சிறப்புப் பட்டறையில் முடிவடைந்திருந்தது.
இந்த பட்டறை, மாணவர்களின் கலாச்சார அடையாளத்தை நிலம் மற்றும் பாரம்பரியங்களுடன் இணைக்க உதவியாக வடிவமைக்கப்பட்டது.

Country-led design reasserts the primacy of the place where an infrastructure project is situated. The Waratah flower, found across southeastern Australia is the protagonist of a Dreamtime story explaining its red colour. Here, a Waratah flower light installation during Vivid Light 2017 in Sydney. Credit: Manfred Gottschalk/Getty Images
இத்திட்டத்தில் நிலம் மற்றும் நீரின் நிலையான பயன்பாடுகள் மூலம் இயற்கை அழிவுகளின் தாக்கங்களைக் குறைப்பதும் அடங்கும்.
Parramatta Square போன்ற தற்போதைய திட்டங்களில் இருந்து உத்வேகம் பெற்று, பூர்வீகக்குடியினரின் அணுகுமுறைகளின் கூறுகள் இக்கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டதாக Olivia Hyde விளக்குகிறார்.
இதேவேளை சில திட்டங்கள் அல்லது முயற்சிகளில் வெறுமனே ஒரு குறிப்பிட்ட குழுவை குறிப்பாக பூர்வீகக்குடி சமூகத்தை இணைக்கவேண்டும் என்பதற்காக அவர்களையும் இணைத்துக்கொள்ளும் அணுகுமுறை அசாதாரணமானது அல்ல என்று பேராசிரியர் Brian Martin கூறுகிறார்.
இதேவேளை Parramatta Squareஐப் பொறுத்தவரை, வடிவமைப்பாளர்கள் தளத்தின் வரலாறு மற்றும் தொடர்ச்சியான நடைமுறைகளை வெளிக்கொண்டுவரும்வகையில் பணிபுரிந்தனர் என Olivia Hyde விளக்குகிறார்.
பூர்வீகக்குடியினரின் கலைப்படைப்பு, மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பூர்வீகக்குடியின வரலாற்று ஆதாரங்களைக் குறிப்பிடும் பல அம்சங்கள் இதில் அடங்குவதாக அவர் மேலும் கூறுகிறார்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.