பூர்வீக மக்களின் பாரம்பரிய வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி கலை மற்றும் அலங்காரம் ஆகும். பல வகையான ஓவியங்கள் இருப்பதால், அவற்றின் வகை, தன்மை, பூர்வீக மக்களின் வாழ்க்கையில் ஓவியங்களுக்கான முக்கியத்துவம் என்பன குறித்த பிரதான பத்து கருத்துகளை முன்வைப்பதுடன், பூர்வீக மக்களின் சமூக கட்டமைப்புகள் குறித்த கருத்துகளையும் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
தனிமரம் தோப்பாகாது என்பது தமிழ் பழமொழி. தமிழர்களுக்கு மட்டுமல்ல, பூர்வீக மக்களுக்கும் குடும்பம், குலம், இனம் என்பன மிகவும் முக்கியம். பூர்வீக மக்களின் சமூக அமைப்பிற்கும் தமிழர்களது சமூக அமைப்புக்குமிடையில் பல ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டு முக்கிய வேறுபாடுகளும் இருக்கின்றன என்பதை உள்ளடக்கிய நிகழ்ச்சி இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.