குறிப்பாக 1520ம் ஆண்டிலிருந்து 1770ம் ஆண்டுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய கப்பல்கள் ஆஸ்திரேலியக் கடற்கரைகளை வந்தடைந்திருக்கின்றன, அதில் வந்தவர்கள் பூர்வீக மக்களுடன் ஏற்படுத்திய உறவுகள் குறித்தும், அண்மைய ஆய்வுகளின்படி முதன்முதலில் ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர்கள் போத்துக்கீசர் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது குறித்தும், ஊடகவியலாளர், எழுத்தாளர் Peter Trickett மற்றும் தொல்பொருள் அகழ்வாளர் Daryl Guse ஆகியோரது கருத்துகளுடன் பூர்வீக மக்கள் சந்தித்த முதல் ஐரோப்பியர்கள் குறித்து நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.