வழக்கறிஞர், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், நூல் ஆசிரியர், கி.ரா வின் கதைசொல்லியின் ஆசிரியர், நாளேடுகளின் கட்டுரையாளர், சமூக வலைதளங்களில் செயல்படுபவர், தமிழகத்தின் அரசியல் கட்சிகளிலேயே முதல் முதலாக முதன்மை செய்தி தொடர்பாளராக 30 ஆண்டுகளுக்கு முன்பே நியமிக்கப்பட்டவர், தேர்தல்களில் வேட்பாளராக களம் கண்டவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசமும் கண்ட கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவுப் பகிர்வுகளோடு, இராம. வீரப்பன் அவர்கள் குறித்த ஒரு பதிவை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.