SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் இருப்போம்”

Vishnu Prasad
இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல ஆய்வுகளை மேற்கொண்டு, பெரும் ஆய்வு மையமாக உருவாகி வருகிறது விஷ்ணு பிரசாத் ஆராய்ச்சி மையம் (VPRC). உலகில் 69 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் மற்றும் 180 கண்டுபிடிப்புகளை கொண்டிருக்கும் VPRC மையம் 19 R&D துறைகளுக்கு விரிவடைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் VPRC மையத்தின் நிறுவனர் விஷ்ணு பிரசாத் அவர்கள் தனது அறிவியல் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share